மட்டக்களப்பில் மகனால் தாக்கப்பட்ட தாய் மரணம்!
Sri Lanka Police
Batticaloa
Eastern Province
Crime
By Rakshana MA
மட்டக்களப்பு – வாழைச்சேனை(Valaichenai) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இன்று(06) ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து பெண் ஒருவரின் இறந்த உடல் மீட்கப்பட்டுள்ளது.
கேணிநகர் பகுதியை சேர்ந்த யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது தாயே இவ்வாறு உயிர் இழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
விசாரணை
குறித்த தாயுடன் வாழ்ந்து வந்த 46 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கி குறித்த தாய் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |