பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சி நீடிக்காது : இம்ரான் எம்.பி
பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சி நீடிக்காது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்(Imran Maharoof) தெரிவித்துள்ளார்.
நேற்று(05) இடம்பெற்ற, எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தம்பலகாமம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்
இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இவர்களுக்காக உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மக்கள் நல்லதொரு பாடம் புகட்டுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கூட்டமானது தம்பலகாமம் பிரதேச ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர் எச்.தாலிப் அலியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |