வக்ஃபு சட்டத் திருத்த யோசனை தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் நடிகர் விஜய்

Vijay Law and Order
By Rakshana MA Apr 04, 2025 11:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

மத்திய அரசாங்கம், வக்ஃபு சட்ட திருத்த யோசனையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய பாரதிய ஜனதா அரசாங்கத்தினால், மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு சட்டத் திருத்த யோசனை, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

இஸ்லாமியர் தனி உரிமை சட்ட விடயங்களில், ஆளும் பாரதீய ஜனதா அரசாங்கம், தொடர்ந்தும் களங்கம் ஏற்படுத்தி வரும் ஒரு மோசமான போக்காக, வக்ஃபு சபை சட்டத் திருத்த யோசனையை நிறைவேற்றியுள்ளது

தெஹிவளை பள்ளிவாசல் இடிப்பது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தெஹிவளை பள்ளிவாசல் இடிப்பது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சட்டத் திருத்த யோசனை

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தங்களின் வழிபாட்டு முறையிலான பண்பாட்டு வாழ்வைப் பின்பற்றும் அனைத்து உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டம், இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டங்கள் வழியே அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கின்றது.

வக்ஃபு சபை சட்டம் என்பது, முஸ்லிம்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூகப் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது.

வக்ஃபு சட்டத் திருத்த யோசனை தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் நடிகர் விஜய் | Actor Vijay Statement About Waqf Act

இந்தநிலையில், இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டத்தின் முக்கிய அமைப்பான வக்ஃபு சட்டத்தைச் சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு, இந்திய அரசியலமைப்பும், நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடும் செயலாகும்.

மத்திய பாரதிய ஜனதா அரசு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைவாத மற்றும் பிளவுவாத அரசியலானது, இஸ்லாமியச் சகோதரர்களைத் தொடர்ச்சியாகப் பாதுகாப்பற்ற நிலையிலும் அச்சத்திலும் உறைய வைத்திருக்கும் உளவியல் தாக்குதலாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இஸ்லாமியர்களின் நலன் காக்கும் சட்டம் என்பது உண்மையானால், அதைத் தாக்கல் செய்யக்கூட, அவர்களிடம் இஸ்லாமியப் பிரதிநிதி ஒருவர் இல்லை என்பதை விஜய் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதம்பாவா எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்!

ஆதம்பாவா எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு பெயர்கள் பரிந்துரைப்பு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு பெயர்கள் பரிந்துரைப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW