ஏறாவூரில் கோர விபத்து..! உயிர் தப்பிய சாரதி
மட்டக்களப்பு (Batticaloa) ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதான வீதியில் பொதுநூலகத்திற்கு அருகாமையில் விபத்து ஒன்று இடம்பெற்றது.
குறித்த விபத்தானது இன்று (13) காலை இடம்பெற்றது.
விபத்து சம்பவம்
வந்தாறுமூலை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி, வந்தாறுமூலை வீ.சி வீதிக்கு செல்ல முற்பட்ட போது, பின்னால் வேகமாக வந்த சிறியரக டிப்பர் ஒன்று முச்சக்கரவண்டியில் மோதுண்டதால், முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி வந்தாறுமூலை பொதுநூலக மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில், டிப்பர் சாரதி தெய்வதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |