பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் : மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) நீக்க வேண்டும் என்பதற்காக, மட்டக்களப்பில் இன்று (12) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு (Batticaloa) மத்திய பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக நடைபெற்ற இந்த செயற்பாட்டில், பொதுமக்களிடையே PTA பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
நீக்க வேண்டிய சட்டம்
இந்த நிகழ்வின் போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பாதிப்புகள் குற்றவாளிகள் அல்லாதோருக்கு விதிக்கப்படும் அதிகாரபூர்வ ஒடுக்குமுறைகள் அகதிகள் போல் வாழும் மக்களின் வாழ்க்கை நிலைகள் என பல்வேறு விடயங்கள் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.
மேலும் இதன்போது ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியது, “ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் இனி தொடர்ந்தும் அகதிகளாகவே வாழக்கூடாது. நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகள் தேவை,” என்று தெரிவித்தனர்.
மக்கள் பலர் தங்களது ஆதரவை கையெழுத்து மூலம் பதிவு செய்ததுடன், சமூகநீதிக்கான ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |