திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட ஆக்கத்திறன் விருது விழா

Trincomalee Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jul 12, 2025 06:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலையில் (Trincomalee) தேசிய ஆக்கத் திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா நேற்று (11) திருகோணமலை மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது, திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசணையுடன் இடம்பெற்றதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட விழா..!

மட்டக்களப்பு கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட விழா..!

ஆக்கத்திறன் விருது

இந்த நிகழ்வானது, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட ஆக்கத்திறன் விருது விழா | Trinco Youth Talent Awards 2025

அதேவேளை, குறித்த இந்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ந.மதிவண்ணன், அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதம குரு வேதாகமமாணி பிரமஸ்ரீ. சோ.இரவிச் சந்திர குருக்கல், மாவட்ட செயலக இந்து சமய கலாசார திணைக்கள அதிகாரி, இந்து சமய கலாசார உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா விதித்த வரி மேலும் குறையுமா..?

அமெரிக்கா விதித்த வரி மேலும் குறையுமா..?

ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery