ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
மத்திய காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் முன் ஊட்டச்சத்து மருந்துகளுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டவரிசையில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
டெய்ர் அல் - பலாவில் உள்ள அல் - அக்ஸா மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி மருத்துவர்கள் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது பல குழந்தைகள் மற்றும் பிறரின் உடல்கள் தரையில் கிடப்பதைக் காண்பித்துள்ளது.
பயங்கர தாக்குதல்
இந்த மருத்துவமனையை நடத்தும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உதவி குழுவான ப்ராஜெக்ட் ஹோப், இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று கூறியது.
இஸ்ரேலிய இராணுவம் "ஹமாஸ் பயங்கரவாதி"யைத் தாக்கியதாகவும், பொதுமக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் வருந்துவதாகவும் கூறியது.
இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், வியாழக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 66 பேரில் அவர்களும் அடங்குவர்.
ஊட்டச்சத்தின்மை தொற்றுநோய் உட்பட பல நோய்களிற்கான மருத்துகளை பெறுவதற்காக மருத்துவநிலையம் திறப்பதற்காக காத்திருந்த மக்கள் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என புரொஜெக்ட் ஹோப் தெரிவித்துள்ளது.
திடீரென ஆளில்லா விமானங்களின் சத்தத்தை கேட்டோம் அதன் பின்னர் வெடிப்பு இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்த யூசுவ் அல் அய்டி என்பவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார்.
நிலத்திற்கடியில் பூமி அதிர்ந்தது, எங்களை சுற்றியிருந்த அனைத்தும் குருதியாகவும் பெரும் அலறல்களாகவும் மாறியது என அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மக்களின் நிலை..
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் தாக்குதலின் உடனடி விளைவுகளைக் காட்டின பெரியவர்களும் சிறு குழந்தைகளும் ஒரு தெருவில் கிடந்தனர் சிலர் பலத்த காயமடைந்தனர் மற்றவர்கள் நகரவில்லை.
அருகிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையின் பிணவறையில் இறந்த குழந்தைகளின் உறவினர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு முன்பு வெள்ளை துணிகள் மற்றும் உடல் பைகளில் போர்த்தி அழுதனர்.
ஒரு பெண் பிபிசியிடம் தனது கர்ப்பிணி மருமகள் மணாலும் அவரது மகள் பாத்திமாவும் அவர்களில் இருந்ததாகவும் மணாலின் மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாகவும் கூறினார்.
"சம்பவம் நடந்தபோது குழந்தைகளுக்கு மருந்துப் பொருட்களைப் பெறுவதற்காக அவர் வரிசையில் நின்றிருந்தார்" என்று இன்டிசார் கூறினார். அருகில் நின்ற மற்றொரு பெண் "அவர்கள் என்ன பாவத்திற்காக கொல்லப்பட்டார்கள்?" என்று கேட்டாள்.
"நாங்கள் முழு உலகத்தின் காதுகளுக்கும் கண்களுக்கும் முன்பாக இறந்து கொண்டிருக்கிறோம். முழு உலகமும் காசா பகுதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இஸ்ரேலிய இராணுவத்தால் மக்கள் கொல்லப்படாவிட்டால் அவர்கள் உதவி பெற முயற்சிக்கும் போது இறக்கிறார்கள். புரொஜெக்ட் ஹோப் ப்ராஜெக்ட் ஹோப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரபிஹ் டோர்பே உதவி குழுவின் மருத்துவமனைகள் "காசாவில் ஒரு புகலிடமாக இருந்தன, அங்கு மக்கள் தங்கள் சிறு குழந்தைகளை அழைத்து வருகிறார்கள், பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு பெறுகிறார்கள், இம்மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை பெறுகிறார்கள் மேலும் பல..." என்று கூறினார்.
மனமுடைந்த கோர சம்பவம்
ஆயினும்கூட இன்று காலை கதவுகள் திறக்கும் வரை வரிசையில் நின்ற அப்பாவி குடும்பங்கள் இரக்கமின்றி தாக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.
திகிலடைந்து மனம் உடைந்து இனி நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை சரியாகத் தெரிவிக்க முடியவில்லை.
இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும். மேலும், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் காசாவில் யாரும் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்பதை இது தெளிவாக நினைவூட்டுகிறது.
இது தொடர முடியாது, " யுனிசெஃப் தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் கூறினார்: "உயிர்காக்கும் உதவியைப் பெற முயற்சிக்கும் குடும்பங்களைக் கொல்வது மனசாட்சிக்கு விரோதமானது."
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |