ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 03, 2024 10:32 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதிக்கப்பட்டதை விட அதிக தொகையை செலவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த நடைமுறையை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் பதவிகளை இழக்கநேரிடலாம், பிரஜாவுரிமை பறிக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வேட்பாளர்கள் மீது நடவடிக்கை

குறிப்பாக, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு பற்றிய விரிவான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கைகள் பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்கள் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு | A Warning To Presidential Candidates

மேலும், அவர்கள் வழங்கிய தகவல்களில் தவறு காணப்பட்டால் பொதுமக்கள் இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்து, வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறைவடைந்துள்ள தங்கத்தின் விலை

குறைவடைந்துள்ள தங்கத்தின் விலை

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ரணில் உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ரணில் உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW