மாளிகைக்காடு மனிதாபிமான உதவியாளர்கள் நடத்திய இரத்ததான முகாம்
மாளிகைக்காடு மனிதாபிமான உதவியாளர்களின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்த தான முகாம் இடம்பெற்றுள்ளது.
இந்த முகாம் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
குருதிப்பற்றாக்குறை
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிகழும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் அதிகளவான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தனர்
இன்றைய நிகழ்வில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளரும், அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஏ.எல். இம்தியாஸ், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர் குழாம், தாதிகள், உத்தியோகத்தர்கள், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், மாளிகைக்காடு மனிதாபிமான உதவியாளர்கள் அமைப்பின் நிர்வாகிகள், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர், செயலாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |