கட்டுப் பணம் செலுத்திய 40 வேட்பாளர்கள்: முடிவடைந்த கால அவகாசம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 40 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்டுப் பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளன.
அத்தோடு, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (15) காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
இதனையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள சரண மாவத்தையை அண்மித்த பகுதி விசேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |