பெருந்தொகை செப்பு உலோகத்தை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்
இலங்கையிலிருந்து ஹொங்கொங் நாட்டிற்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ய முயன்ற 23000 தொன் செப்பு உலோகங்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (23) செப்பு குழாய் பொருத்திகள் என ஏமாற்றி ஏற்றுமதி செய்ய தயாராகிக்கொண்டிருந்த நிலையிலேயே ஏற்றுமதி முனையத்தில் இருந்து குறித்த செப்பு உலோகங்களை கைப்பற்றியுள்ளனர்.
பெறுமதிவாய்ந்த செப்பு
மேலதிக விசாரணையின் போது, பேலியகொட பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் செப்பு உலோகங்களை உருக்கி ஏற்றுமதி செய்ய முயன்றுள்ளமையும், குறிப்பிட்ட தொகை செப்பானது சுமார் 5 கோடி ரூபா பெறுமதியானது எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட செப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |