இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

Lankasri Tourism Israel
By Rukshy Oct 24, 2024 07:13 AM GMT
Rukshy

Rukshy

ஆபத்தில் உள்ள இஸ்ரேலியர்கள் அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சிறப்பு தொலைபேசி எண் ஒன்றை இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுலா அல்லது வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள இஸ்ரேலியர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், நேரடியாக தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

பயண எச்சரிக்கை

இதன்படி, 071-8592651 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை பொலிஸாரின் சுற்றுலாப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு | Notice To Israeli Nationals In Sri Lanka

அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த புதிய அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது அறுகம்பேயில்  பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளதுடன், பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கைகளை வழங்கியுள்ளன. 

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

நுவரெலியாவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம்

நுவரெலியாவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW