நுவரெலியாவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம்
தற்போதைய சூழலில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர், இதனை தீர்க்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விழிப்புணர்வுச் செயற்திட்டமானது நேற்று (23) நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 1500 இற்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.
புதிய தொழிநுட்ப பயன்பாடுகள்
இதன்போது உயர் ரக விவசாய உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் மற்றும் விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கூட்டெரு தயாரித்தல், தொற்றுநீக்கும் முறைகள் செயன்முறை மூலம் செய்துகாட்டப்பட்டுள்ளதுடன் நடுகை விதைகள் அவற்றின் வகைகள் மற்றும் அதன் நடுகை முறைகள் பற்றியும் தெளிவூட்டப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |