அம்பாறையில் கரை ஒதுங்கிய இராட்சத புள்ளிச்சுறா

Ampara Sri Lanka Fish
By Shalini Balachandran Oct 24, 2024 02:26 AM GMT

அம்பாறையில் சுமார் 2000 கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட இராட்சத புள்ளிச்சுறா ஒன்று கரை ஒதிங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் குறித்த இராட்சத சுறா செவ்வாய்க்கிழமை (22) கரை ஒதுங்கியுள்ளது.

இந்தநிலையில், கரை ஒதுங்கிய அச்சுறாவினை ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லும் முயற்சியில் கடற்படையினருடன் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

இராட்சத சுறா

கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் சுறாவை அவதானித்து கடற்கரையில் தத்தளித்து கொண்டிருந்த சுறாவை  கடற்படையினருடன் இணைந்து மக்களும் ஒன்றிணைந்து மீண்டும் ஆழ்கடலுக்கு இழுத்துச் சென்று பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

கட்றறொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் கடற்படையினரின் சுமார் பல மணி நேர பிரயத்தனத்தின் பின்னர் குறித்த சுறா ஆழ் கடலுக்குள் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் கைது

மட்டக்களப்பில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் கைது

சோள இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

சோள இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery