அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் புதிய பெண் அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்
தற்காலத்தில் பெண்கள் பல்துறைசார் ஆற்றல்களை வளர்த்துக் கொண்டு மாறி வரும் உலகிற்கு ஏற்றாற் போல் தங்களை நிலை நாட்டி வருகின்றனர்.
அந்த வகையில் அக்கரைப்பற்றின் தாய் பாடசாலையாக முழு ஊரினதும் அடையாளத்தை பறைசாற்றி நிற்கும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக ஏ. எல். நஸீபா ஆசிரியை 22 ஆம் திகதி கடமையேற்றுள்ளார்.
இது நேற்று (23) பாடசாலை வளாகத்தில் நிகழ்வாக அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.
திறமைகளின் அடிப்படையில் பதவி
புதிய அதிபராக பதவியேற்ற நஸீபா ஆசிரியை 22 வருடங்கள் இப்பாடசாலையில் பணிபுரிந்துள்ளார். மேலும் அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து ஜனவரி 10ஆம் திகதி இப்பாடசாலையிலேயே பிரதி அதிபராக தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் இவர் சிறந்த ஆசிரியருக்கான குரு பிரதீபா பிரபா விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |