சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலையின் 2 ஆவது ஆண்டு நிறைவு விழா
சம்மாந்துறையிலுள்ள(Sammanthurai) கல்வி நிறுவனமான ஸம் ஸம் பாலர் பாடசாலை தனது 2ஆவது ஆண்டு நிறைவு விழாவை பாடசாலையின் ஆசிரியர் எம்.ஐ. சித்தி சமியா, எம்.ஐ.சித்தி சமினா ஆகியோரின் தலைமையில் முன்னெடுத்துள்ளது.
இந்த ஆண்டு நிறைவு விழாவானது நேற்று(15) சம்மாந்துறை எம் எஸ் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் பாடசாலையின் மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டதுடன், நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
நிகழ்ச்சிகள்
அத்துடன் மாணவர்களை கல்வியால் வளப்படுத்திய ஆசிரியர்களுக்கு கௌரவ நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம். ஹனீபா, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட தமிழ் மொழி துறை விரிவுரையாளர் ஏ.றமிஸ் அப்துல்லா, சம்மாந்துறை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைத்துவ முகாமையாளர் எம்.பி.எம். உசைன், ரிசாட் அன்ட் பிரதர்ஸ் அமைப்பின் தலைவரும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர் கே.ஆர்.எம்.ரிசாட், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம். சஹீல் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |