சட்டவிரோத பொருட்களை விற்க முயன்ற பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கைது

Sri Lankan Peoples Crime Department Of Wildlife
By Rakshana MA Jan 16, 2025 04:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

சட்டவிரோதமான முறையில் மான் கொம்பு, மரை கொம்பு மற்றும் சங்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்கு வகைகள் என்பவற்றை விற்பனை செய்ய முயற்சி செய்த உயர்தரத்தில் கற்கும் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் அலவ்வ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, புத்தளம் - கருவலகஸ்வெவ மற்றும் குருநாகல் வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் நேற்று(15) முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த சட்டவிரோதமான பொருட்களை 13 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சீமெந்து விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சீமெந்து விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சட்டவிரோத பொருட்கள் விற்பனை 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உடவலவ, கேகாலை, தெனாலேகம மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பொருட்களை விற்க முயன்ற பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கைது | Deer Mare Antlers And Restricted Antlers In Sl

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது, ஒன்பது அடுக்கு மான் கொம்பு, ஒரு அடுக்கு ஒற்றை மான் கொம்பு, மரை கொம்பு, எருமை மாட்டுக்கொம்பு மற்றும் விற்பனை செய்வதற்கு தடைசெய்யப்பட்ட king conch seashell சங்குகள், சந்தேக நபர்கள் பாவித்த கைத்தொலைபேசிகள், சந்தேக நபர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்திய சொகுசு கார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

கண்டி மாணவி கடத்தல் விவகாரம்! தாயின் வாக்குமூலம்

கண்டி மாணவி கடத்தல் விவகாரம்! தாயின் வாக்குமூலம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW