தொடருந்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு
Badulla
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Laksi
தெமோதர - கவரவெல பிரதேசத்தில் தொடருந்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தானது இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக எல்ல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில், றபர்வத்த பிரிவு, கவரவெல - தெமோதர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
குறித்த இளைஞன் கொழும்பு - கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடு்த்து, விபத்து தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |