பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நியமனம் சட்டபூர்வமானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் நியமனம் குறித்து இன்று (26) நாடாளுமன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் நியமனம்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சபாநாயகர், நாம் எந்தவொரு தவறான தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அரசியலமைப்பிற்கமைய நியாயமான, சரியான தீர்மானத்தை ஆழமாக சிந்தித்துதான் எடுத்துள்ளோம்.
ஏனையோருக்கு அந்த தீர்மானம் தவறாகத் தோன்றலாம். ஆனால் நாம் மனச்சாட்சிக்கமைய சரியான முறையிலேயே அந்த தீர்மானத்தை எடுத்தோம்.
எனவே, தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது எனவும் நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |