ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டம்
Afghanistan
Taliban
World
By Laksi
ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.
அத்தோடு, பெண்கள் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உரிமைக் குழுக்களும் கடுமையாக விமர்சித்துள்ளது.
புதிய தலிபான் விதிகள்
புதிய தலிபான் விதிகள் ஆப்கானிஸ்தானில் பெண்களை மேலும் ஒடுக்குகின்றதாகவும் பொது வாழ்க்கை மற்றும் அடிப்படை சுதந்திரங்களில் இருந்து அவர்களை தடை செய்கிறதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மேற்கத்திய அரசாங்கங்களால் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |