பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் பெண் கைது
கானாவில்(ghana) இருந்து இலங்கை வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 4 கிலோ 68 கிராம் கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க பெண் ஒருவர் இன்று(29) அதிகாலை 1.50 மணியளவில் இலங்கை வந்தடைந்ததையடுத்து, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அவரது பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கேய்னைக் கண்டுபிடித்ததாக சுங்கப் பேச்சாளர், சுங்கப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
அத்துடன், சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 14 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் இந்த கைது சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் 41 வயதானவர் மற்றும் இவர் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இந்த பெண்ணையும் அவர் கொண்டு வந்த போதைப் பொருட்களையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |