மக்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணத்தொகை! வெளியான தகவல்கள்
அஸ்வெசும கொடுப்பனவுகளுக்கான நிலுவைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படும் என நலன்புரிப் பலன்கள் வாரியத்தின்(WBB) தலைவர் ஜயந்த விஜேரத்ன(Jayantha Wijeratne) அறிவித்துள்ளார்.
இதன்படி, 212,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது தங்கள் நிலுவையிலுள்ள கொடுப்பனவுகளை பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 1.3 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவு
இதற்கிடையில், கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே,
400,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் புதிய வேலைத்திட்டத்திற்கான திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கியின் ஆதரவு இந்த வேலைத்திட்டத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கும்.
ஆகவே, 2025 இல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த முயற்சியானது, முன்னர் சமுர்த்தி நன்மைகளைப் பெற்ற ஆனால் அஸ்வெசும திட்டத்தில் உள்ளடக்கப்படாத குடும்பங்களை முதன்மையாக இலக்காகக் கொண்டது.
கொடுப்பனவின் குறிக்கோள்
இது நிதி உதவியை விநியோகிப்பதற்கான மற்றொரு முயற்சி அல்ல. இந்த குடும்பங்கள் எவ்வாறு வாழ்கின்றன மற்றும் சம்பாதிக்கின்றன என்பதை உண்மையாக மாற்றி, நிலையான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள்.
குறுகிய கால நிதி நிவாரணத்திற்கு பதிலாக நீண்ட கால அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தும் வறுமை ஒழிப்புக்கான அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1314 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை நிலுவைத் தொகையாக வைப்பிலிட வேண்டியுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |