வன விலங்குகளால் பெரும் பயிர் சேதம்!
வனவிலங்கு அழிவு இலங்கையின் விவசாயத்திற்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி மற்றும் குரங்குகள் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 55.3 பில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் அனுராதா தென்னகோன்(Anuradha Thennakon) தெரிவித்துள்ளார்.
இதன்படி, 5.2 பில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 86.7 மில்லியன் தேங்காய்களை விலங்குகள் அழித்ததாகவும், இது நாட்டின் மொத்த தேங்காய் விளைச்சலில் 140,450 ஹெக்டேரில் 17.5% பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இங்கு தென்னை சேதத்திற்கு கூடுதலாக, இந்த விலங்குகள் 25% நெல் பயிர்களையும், 11% சோளத்தையும், 7% காய்கறிகளையும் சேதப்படுத்தியுள்ளன.
சேதப்படுத்தும் வனவிலங்குகள்
காட்டுப்பன்றி மற்றும் குரங்குகள் மட்டுமே, 131 மில்லியன் கிலோகிராம் அரிசி, 169 மில்லியன் கிலோகிராம் வாழைப்பழங்கள் மற்றும் 6.8 மில்லியன் கிலோ மக்காச்சோளத்தை அழித்து முறையே 13.2 பில்லியன், 22.1 பில்லியன் மற்றும் 10.3 பில்லியன் ரூபா நட்டத்திற்கு காரணமாகும்.
மேலும், 4.5 பில்லியன் ரூபா பெறுமதியான 59.7 மில்லியன் கிலோகிராம் மரக்கறிகளை அழித்துள்ளன. அத்துடன் ஊவா மாகாணம் 45,000 ஹெக்டேயர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேல், மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் வடமேல் உட்பட ஏனைய மாகாணங்களும் கணிசமான இழப்பை சந்தித்துள்ளன.
தொடர்ந்தும் வடமாகாணத்தில் 16,000 ஹெக்டேயர் நட்டமடைந்துள்ளது.
தென்னகோன் இந்த விலங்குகளின் பெருகிவரும் மக்கள்தொகை குறித்து கவலை தெரிவித்ததோடு, வனவிலங்கு சேதத்தை நிர்வகிப்பதில் அதிகாரிகளின் தலையீடு இல்லாததை விமர்சித்துள்ளார்.
மேலும், மனித - வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்ப தீர்வுகள் இல்லாவிட்டால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை கைவிடும் மோசமான யதார்த்தத்தை விரைவில் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |