மில்லியன் கணக்கான பணம் இலஞ்சம் : முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lankan Peoples
Bribery Commission Sri Lanka
Crime
By Rakshana MA
9 மில்லியன் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் இன்னுமொரு வர்த்தகரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
விசாரணை
இந்த தொகை பணமானது மற்றுமொரு வர்த்தகரிடம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட போதே இருவரும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், தொழிலதிபரின் உறவினர் ஒருவரின் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்ட காணிக்கான நட்டஈட்டை விரைவுபடுத்துவதாக உறுதியளித்து குறித்த இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |