மட்டக்களப்பில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Dec 26, 2024 10:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பில்(Batticaloa) 34ஆவது தேசிய மத்தியஸ்த தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(26) நடைபெற்றது.

இங்கு சர்வமத பிரார்த்தனை வரவேற்பு உரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் ஆஸாத் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு தின நிகழ்வு

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு தின நிகழ்வு

மத்தியஸ்தர் பாராட்டு 

அத்துடன் மத்தியஸ்த சபைகளின் செயற்பாட்டை மேலும் வலுவடையச் செய்யும் நோக்கில் நீதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைய மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு | 34Th Mediation Day Event Held In Batticaloa

இதில் 25 வருடங்கள் மத்தியஸ்தராக கடமையாற்றிய மத்தியஸ்தர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் காத்தான்குடி பிரதேச மத்தியஸ்த சபையின் 3 மத்தியஸ்தர்கள் பாராட்டுப் பெற்றனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 பெண் மத்தியஸ்தர்கள் உள்ள மத்திய சபையாக காத்தான்குடி பிரதேச மத்தியஸ்த சபை இருப்பதை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

குருநாகல் துப்பாக்கிச்சூடு விவகாரம்: சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

குருநாகல் துப்பாக்கிச்சூடு விவகாரம்: சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

நிகழ்வு

இது தவிர பாடசாலை மட்டத்தில் மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் உட்பட சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு | 34Th Mediation Day Event Held In Batticaloa

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வில் மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் மற்றும் அதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட வெற்றிச் செயற்பாடுகள் தொடர்பிலும், அது எதிர்நேக்கும் சவால்கள் தொடர்பிலும் கருத்துரைகளும் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன் உட்பட விசேட காணி மத்தியஸ்த சபை மற்றும் ஏனைய மத்திய சபைகளின தவிசாளர்கள்,மத்தியஸ்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அம்பாறையில் காணாமல் போகும் மோட்டார் வாகனங்கள் : பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறையில் காணாமல் போகும் மோட்டார் வாகனங்கள் : பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

அரிசி இறக்குமதி தொடர்பாக வெளியான வர்த்தமானி

அரிசி இறக்குமதி தொடர்பாக வெளியான வர்த்தமானி

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery