மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு தின நிகழ்வு
மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சுனாமி அனர்த்த தினத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினமும் குருதிக்கொடை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (26) வியாழக்கிழமை மாளிகைக்காடு மத்தி தோணா வீதியில் அமைந்துள்ள ஜனாஸா நலன்புரி அமைப்பின் கட்டிடத்தில் நடைபெற்றுள்ளது.
சுனாமியில் மரணித்த ஸுஹதாக்களை நினைவு கூர்ந்து நடைபெறும் இந்த இரத்த தான முகாமை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
குருதிக்கொடை
இந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய ஆர்வமுள்ள அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.
இந்த இருபதாவது சுனாமி நினைவு தின குர்ஆன் தமாம், துஆ பிரார்த்தனை, விசேட சொற்பொழிவு, குருதிக்கொடை நிகழ்வில் உலமாக்கள், காரைதீவு பிரதேச செயலக அரச அதிகாரிகள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |