காத்தான்குடி பிரதேச வீதி அபிவிருத்திகள் தொடர்பில் பிரபு எம்.பி கவனம்

Batticaloa World Bank Eastern Province
By Laksi Dec 26, 2024 06:58 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa) – காத்தான்குடி நகர சபை பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கவனம் செலுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட வீதி மற்றும் கால்வாய் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.

மோட்டார் சைக்கிளில் காத்தான்குடி பிரதேசத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடு வீடாக சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின துஆ பிரார்த்தனை

மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின துஆ பிரார்த்தனை

வீதிகள் புனரமைப்பு

அத்தோடு, குறித்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

காத்தான்குடி பிரதேச வீதி அபிவிருத்திகள் தொடர்பில் பிரபு எம்.பி கவனம் | Prabhu Mp S Focus On Kathankudi Road Developments

காத்தான்குடி நகர சபை பிரிவில் உலக வங்கி நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் அந்த பகுதி மக்களின் கருத்துக்களை உள்வாங்கி மக்கள் பாதிக்கப்படாத வகையில் வீதி மற்றும் கால்வாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

காத்தான்குடியில் சுமார் 30 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் உலக வங்கியின் நிதியுதவியில் வீதிகள் புனரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அம்பாறையில் கடலில் நீராட சென்ற மூவர் மாயம்

அம்பாறையில் கடலில் நீராட சென்ற மூவர் மாயம்

இலங்கை தபால் சேவைகளை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டம்

இலங்கை தபால் சேவைகளை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW