வாக்களிப்பு நிலையத்தில் பெண் பொறுப்பு அதிகாரிக்கு ஏற்பட்ட பரிதாபம்!
நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பெண் அதிகாரி ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இறப்பு சம்பவம் நேற்று(13) இரவு 7.40 மணிக்கு பதிவாகியுள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பொது தேர்தலின் வாக்களிப்பு முன்னெடுக்கப்பட்ட கெஸ்பேவ - பொல்ஹேன பகுதியில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
மேற்படி மரணடைந்த பெண் கொழும்பு அளுத்கடே மேல் நீதிமன்றில் வேலைத்திட்ட உதவி நீதிபதியாக கடமையாற்ற நேற்று (13) காலை கெஸ்பேவ பொல்ஹேன மடத்தில் ஸ்தாபிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரியாக தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.40 மணியளவில் தனது அறையில் தங்கியிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளால் அவர் சிகிச்சைக்காக பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இருந்தபோதிலும் சிகிச்சைக்கு முன்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பெண் பயாகல இந்துருவாகொடவில் வசிக்கும் லியனகே சாமிகா ருவானி லியனகே என்ற (48) வயதுடைய திருமணமாகாத பெண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இச்சம்பவத்தால் வாக்குச்சாவடி பணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |