வேலைவாய்ப்பு பணியகத்தில் மோசடி: விசாரணைகள் ஆரம்பம்!
கடந்த காலங்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டமைக்கு அமைய விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த வேலைவாய்ப்பு பணியகத்தில் 15 மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டமைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணியக தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவிக்கையில், சிறப்புப் பிரவுக்கு 3,040 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்
மேலும், இதில் அன்றாட தீர்வுகளை வழங்கக்கூடிய முறைப்பாடுகள் 1,124 காணப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும், உள்ளக கணக்காய்வு செயல்முறையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மோசடி அல்லது ஊழல் இடம்பெற்றுள்ளதா என கண்டறிய 15 சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.
அவற்றில் 3 தற்போது முறையான உள்ளக தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இன்னும் சில வெளி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான தகவல்களுடன் விசாரணைகளும் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கோசல விக்கிரமசிங்க கருத்த வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |