மூதூரில் காட்டு யானைகள் அட்டகாசம்: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலை (Trincomalee) - மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பகுதியில் காட்டு யானைகள் உட்புகுந்து, பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக கிராமவாசிகள் தெரித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றிரவு (9) இறால்குழி - நாவலடி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், குறித்த காட்டு யானைகள் அங்குள்ள தென்னை மரங்களை துவசம் செய்துள்ளதோடு, குடியிருப்பு வீடொன்றையும் சேதப்படுத்தி உள்ளது.
மக்கள் கோரிக்கை
அத்தோடு, காட்டு யானைகள் வீட்டை உடைக்கும் போது, அங்கு குடியிருந்தவர்கள் பலத்த போராட்டத்துக்கு மத்தியில் அயலவர்களை உதவிக்கு அழைத்து பாதுகாப்பாக வெளியேற்றியதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இந்த கிராமத்தை காட்டு யானை தாக்கி வருவதால், ஒவ்வொரு இரவையும், அச்சத்தோடுதான் கழித்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
யுத்தத்துக்கு பின்னர் மீள் குடியேற்றப்பட்ட இந்த நாவலடி கிராமத்தில், சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், நிம்மதியாக வாழ்வதற்கு வழி செய்யுமாறும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |