நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள்

Anura Kumara Dissanayaka President of Sri lanka Presidential Update
By Rakshana MA Dec 10, 2024 12:31 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(09) நடைபெற்ற 2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், "தூய்மையான எதிர்காலத்திற்காக இளைஞர்களை ஒன்றிணைப்போம்" என்ற தொனிப்பொருளில் இந்த வருட ஊழல் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

ஊழல் எதிர்ப்பு தினம் கொண்டாட காரணம்..

மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட முடியாவிட்டால் அந்த அதிகாரத்தினால் பயனில்லை என்று சுட்டிக்காட்டியதோடு இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு போதுமான சட்டங்களும் நிறுவனங்களும் இருந்த போதும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தமது மனசாட்சியிடம் கேட்க வேண்டும்.

நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள் | President Anura Speech At Bandaranayaka Colombo

ஊழல் மற்றும் இலஞ்சம் என்பன சமூக அவலமாக மாறியுள்ளது. 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 வது இடத்தைப் பிடித்துள்ளது.

எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

வருடா வருடம் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அடுத்த வருடம் அதனை குறைக்க முடியாவிட்டால் சர்வதேச தின கொண்டாட்டங்களை நடாத்துவதில் எவ்வித பயனும் இல்லை.

ஷைத்தான் இப்படியும் வழி கெடுப்பான்..! புர்சீஸாவின் கதை

ஷைத்தான் இப்படியும் வழி கெடுப்பான்..! புர்சீஸாவின் கதை

வழக்கு தாக்கல்..

2021ஆம் ஆண்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 69 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதுடன் 40 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

2022 இல் 89 வழக்குகளை தாக்கல் செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 45 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது. இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள் | President Anura Speech At Bandaranayaka Colombo

ஒரு வருடமொன்றில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.

மேலும் அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்கின்றன.

புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பது குறித்து கலந்துரையாடல்

நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும்

எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் அத்தோடு அவ்வாறு செய்யாமல் ஆரோக்கியமான நாடொன்றை உருவாக்க முடியாது.

சட்டத்தை அமுல்படுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது.

நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள் | President Anura Speech At Bandaranayaka Colombo

எனவே இலங்கையை இலஞ்சம் பெறுவது மட்டுப்படுத்தப்பட்ட நாடாக மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலம் பிரஜைகளின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பை வழங்க முடியும்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஜுரே (JURE) திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1,000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 15 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமனம் வழங்கப்பட்டது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! மந்தமாகிய பண்டிகைக்கால வியாபாரம்

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! மந்தமாகிய பண்டிகைக்கால வியாபாரம்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளர் நியமனம்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளர் நியமனம்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery