சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்ட செய்தி

Human Right Day Sri Lanka Harini Amarasuriya
By Laksi Dec 10, 2024 01:21 PM GMT
Laksi

Laksi

அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (10) வெளியிட்ட செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 2024 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், “எமது உரிமைகள், எமது எதிர்காலம், இதோ இப்போதிருந்து” என்ற 2024 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தின கருப்பொருளுடன் ஒரு தேசமாக நாம் ஒன்றுபட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு

பிரஜைகளினது உரிமை

இந்த கருப்பொருள் மனித உரிமைகளின் பாதுகாப்பும் மேம்பாடும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபடுவதற்கான இலட்சியங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நிகழ்காலத்திற்கு மிகவும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை எமக்கு நினைவூட்டுகிறது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்ட செய்தி | Human Rights Day Speech In Pm Harini Amarasuriya

அனைத்து பிரஜைகளினதும் உரிமைகளையும் பாதுகாப்பது ஒரு நீதியான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கின்ற அதேநேரம், இது அனைவருக்கும் கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் செழித்தோங்கும் ஒரு எதிர்காலத்திற்கான அடிப்படையாகும்.

நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள்

நாட்டு மக்களுக்கு அநுர விடுத்துள்ள வேண்டுகோள்

அனைவருக்கும் நீதி

இந்த உலகளாவிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் நீதி மற்றும் வாய்ப்புகளை உத்தரவாதம் செய்யும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை இந்த சிறப்புவாய்ந்த நாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்ட செய்தி | Human Rights Day Speech In Pm Harini Amarasuriya

ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டால், அனைவரினதும் மனித உரிமைகளை மதிக்கும், பாதுகாக்கும் மற்றும் கொண்டாடும் புதியதோர் உலகை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் லங்கா ஐஓசி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் லங்கா ஐஓசி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW