கிழக்கு மாகாண ஆளுநருக்கும் லங்கா ஐஓசி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

Trincomalee Lanka IOC Eastern Province
By Laksi Dec 10, 2024 11:43 AM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் (Jayantha Lal Ratnasekera) லங்கா ஐஓசி (Lanka IOC)  சிரேஷ்ட அதிகாரிகளுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (10) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் குறிப்பாக திருகோணமலையில் கவனம் செலுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! மந்தமாகிய பண்டிகைக்கால வியாபாரம்

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! மந்தமாகிய பண்டிகைக்கால வியாபாரம்

நன்கொடை

ஆளுநரின் கோரிக்கையை அடுத்து, கிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டுக்காக, லங்கா ஐஓசியின் நிறுவனத்தினர் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றையும் நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்தனர்.

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் லங்கா ஐஓசி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு | Eastern Governor Meet For Lanka Ioc Officer

நிலையான அபிவிருத்திக்கான வெளிப்படையான, ஊழலற்ற அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஆளுநர் தனது ஒத்துழைப்பை உறுதியளித்தார்.

லங்கா ஐஓசியின் சிரேஷ்ட முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ் , லங்கா ஐஓசியின் சிரேஷ்ட உதவி தலைவர்( கொழும்பு) அம்பர் அஹமட் , சிரேஷ்ட உதவி தலைவர் நவீன் குமார், ஐஓசியின் பொறியியல் துறை ( கொழும்பு) உதவி தலைவர் சந்தீப் கப்டா மற்றும் ஐஓசியின் பொறியியல் துறை உதவி தலைவர் B.K. மண்டால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி

கேக் விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கேக் விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery