கேக் விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கேக் (Cake) விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கேக் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மற்றும் வரி அதிகமாக இருப்பதால் கேக் தயாரிப்பில் அதிக செலவு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கேக் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான நல்லெண்ணெய், கோதுமை மா, முட்டை உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்பட்டால், கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
கேக் விலைகள்
அத்துடன், இந்த நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு புதிய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரிடம் தமது சங்கம் சந்தர்ப்பம் கோரிய போதிலும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கான கேக்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும், தற்போது சந்தையில் ஒரு கிலோ தரமான கேக்குகள் 1000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |