சர்ச்சைக்குரிய வெள்ளை வான் வழக்கு: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
'வெள்ளை வான்' குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சர்ச்சைக்குரிய வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று (29.11.2024) வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
வானில் ஆட்கள் கடத்தப்பட்டமை
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வெள்ளை வானில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டிருந்தார்.
அதனையடுத்து, ராஜித சேனாரத்ன மற்றும் இருவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கிலிருந்து தற்போது ராஜித சேனாரத்ன உட்பட மூவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |