மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிஸாம் காரியப்பர்
தொழிலதிபர் ஹனீப் யூசுப் ஆளுநராக பதவியேற்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் மேல்மாகாணத்தின் புதிய ஆளுநராக தொழிலதிபர் ஹனீப் யூசுப் நியமனம் பெற்றுள்ளார்.
இந்த நிலையிலேயே நிஸாம் காரியப்பர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
பதவி
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஹனீப் யூசுப் ஒரு சிறந்த வர்த்தகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.அவர் ஏற்றுமதி துறையில் மில்லியன் கணக்கான பணத்தை நாட்டிற்கு ஈட்டித்தந்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அவர் அனுரவின் வெற்றிக்காக நிதி வழங்கியிருக்கலாம். அதனால் அவருக்கு கைமாறாக இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதா என நான் கேட்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதி அநுர குமாரவை பற்றி பேசுவதற்கு எனக்கு பயம் இல்லை. நாம் ஊழல் மோசடி செய்யவில்லை எனவும் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |