காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Aug 18, 2024 02:08 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மக்களின் வாக்குகளை கொண்டு சூதாட அனுமதிக்க முடியாது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிழக்கு மக்களின் வாக்குகளை கொண்டு சூதாட அனுமதிக்க முடியாது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மின்னல் தாக்கம்

மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | Weather Warning Issued Department Of Meteorology

மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

காசாவில் போலியோ நோயுடன் குழந்தையொன்று அடையாளம்

காசாவில் போலியோ நோயுடன் குழந்தையொன்று அடையாளம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW