காசாவில் போலியோ நோயுடன் குழந்தையொன்று அடையாளம்
Water
World
Gaza
By Laksi
கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் போலியோ நோயுடன் குழந்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய காசா பகுதியில் தடுப்பூசி போடப்படாத 10 மாத குழந்தைக்கு இந்த போலியோ நோயானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜோர்டானில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
போலியோ
போலியோ வைரஸ், பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் அசுத்தமான நீர் மூலம் பரவுகிறது. அது மட்டுமல்லாது இது சிதைவு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் ஒரு ஆபத்தான நோயாகும்.
மேலும், போலியோ நோயானது முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |