நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change Weather
By Laksi Dec 27, 2024 02:50 AM GMT
Laksi

Laksi

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (27.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவில் வாகனங்களை நிறுத்தும் பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

இரவில் வாகனங்களை நிறுத்தும் பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும்.

நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு | Weather Alert Today In Sri Lanka

இடியுடன் கூடிய மழையுடன் அப்பிரதேசங்களில் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்.

ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்.

ஹட்டன் பஸ் விபத்து : சாரதி விளக்கமறியலில்

ஹட்டன் பஸ் விபத்து : சாரதி விளக்கமறியலில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW