ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்.

Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Eastern Province Kalmunai
By Rakshana MA Dec 26, 2024 02:07 PM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரத்த  தான முகாமானது இன்று(26) கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமைப்பின் செயலாளர் முஹம்மட் முனா தலைமையில் இடம் பெற்றது.

இது தொடர்பில் அமைப்பின் செயலாளர் தெரிவித்ததாவது,

எமது பிரதேச வைத்தியசாலைக்கு ஏற்பட்டிருக்கின்ற இரத்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக இவ்வாறான இரத்தக்கொடை நிகழ்வுகள் இடம்பெற வேண்டும்.

100 நடமாடும் நெல் களஞ்சியசாலைகள் தொடர்பில் எஸ்.பி திஸாநாயக்க குற்றச்சாட்டு

100 நடமாடும் நெல் களஞ்சியசாலைகள் தொடர்பில் எஸ்.பி திஸாநாயக்க குற்றச்சாட்டு

இரத்த தானம்

அதிலும் குறிப்பாக ஒரு உயிரை வாழ வைப்பது ஒரு சமூகத்தை வாழ வைப்பது போன்ற நன்மையை பெறக்கூடிய ஒரு செயற்பாடாகும்.

எனவே, இந்த விடயம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே நாம் முயற்சித்து இந்த இரத்த தானம் ஏற்படு செய்திருக்கிறோம்.

ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம். | Blood Donation At Kalmunai

எமது அமைப்பின் ஊடாக இச்சமூக சேவையை தொடர்ந்தும் செய்து வருகிறோம் என்றும் கூறினார்.

இரத்ததான முகாமில் சுமார் 70 க்கும் மேற்பட்ட இரத்தக்கொடையாளர்கள் கலந்துகொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்திருந்தார்கள்.

இந்நிகழ்வில் அதிதிகளாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கியின் அதிகாரி வைத்தியர் சுபோதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்ட முதியோர்களுக்கு காதுகேள் கருவிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்ட முதியோர்களுக்கு காதுகேள் கருவிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

மட்டக்களப்பில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW