திருகோணமலை மாவட்ட முதியோர்களுக்கு காதுகேள் கருவிகள் வழங்கி வைப்பு
Trincomalee
Sri Lankan Peoples
Eastern Province
By Laksi
திருகோணமலை (Trincomalee) மாவட்ட முதியோர்களுக்கு ரூபா 1 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான காதுகேள் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த கெட்டி ஆராய்ச்சி தலைமையில் நேற்று (25) நடைபெற்றுள்ளது.
காதுகேள் கருவிகள்
இதன்போது, குச்சவெளி மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள, தேவையான முதியோர்களுக்கு இந்த கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் S. சுதாகரன், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் A.L.M இர்பான் மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்திசாலையில் ஒலியியல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |