சூரியனின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சூரியனின் வடக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக நேற்று(05) முதல் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கையைச் சுற்றியுள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை இன்றைய தினத்திற்கான காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
சூரியனின் இயக்கம்
இது தொடர்பில் குறித்த அறிக்கையில்,
இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் களுத்துறை, கெலிங்கந்த, கஹவத்தை, பொக்குனுதென்ன மற்றும் மஹவெலதொட்ட பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அத்தோடு நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75மி.மீ வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் அபாயங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |