சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தினால் 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முறையான சுங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இது இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக கட்டாய சுங்க நடைமுறைகளுக்கு உட்படாமல் பதிவு செய்யப்பட்டதற்காக இந்த வாகனங்கள் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாகனங்கள் பறிமுதல்
ஒரு ஜீப், ஆறு மிட்சுபிஷி மோன்டெரோ ஜீப்கள், மூன்று டொயோட்டா ஜீப்கள், ஒரு லேண்ட் குரூசர் பிராடோ ஜீப் மற்றும் ஒரு நிசான் டபுள் கேப் ஆகியவை சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதைக் கண்டறியவும், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பை மதிப்பிடவும் மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி விசாரணை நடத்தப்படுகிறது என்று ஆணையகம் தெரிவித்துள்ளது.
மேலும், சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு ரூ.597,189,323 இழப்பை ஏற்படுத்திய 15 வாகனங்களும் காவலில் எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |