உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட கலந்துரையாடல்
Election Commission of Sri Lanka
Trincomalee
Sri Lankan Peoples
Election
Local government Election
By H. A. Roshan
திருகோணமலை(Trincomalee) மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட இருக்கும் அனைத்து வேட்பாளர்களுடனும் சந்திப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட சந்திப்பானது நேற்று (04) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட கலந்துரையாடல்
குறித்த நிகழ்ச்சியின் போது, கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றி தெளிவூட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்த்தன, பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தலதா அத்துக்கொரல, பிரதி தலைவர் மற்றும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






