பெரியநீலாவனையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
அம்பாறை(Ampara) – பெரியநீலாவனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(03) இரவு 11.30 மணியளவில் கல்முனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பெரியநீலாவனையை சேர்ந்த 25 வயதுடைய என தெரியவந்துள்ளது. மேலும் இவரிடமிருந்து 1 கிராம் 70 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக பெரியநீலாவனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவனை பொலிஸார் மற்றும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |