புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் அரசாங்கம் கடன் பெறவில்லை: விஜித ஹேரத்
நாட்டின் வழமையான செயற்பாடுகளுக்காக புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் அரசாங்கம் கடன் பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளிடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்தோ அரசாங்கம் கடன் பெறவில்லை.
புதிய பிணைமுறி பத்திரங்கள்
திறைசேரி பத்திரங்கள் மற்றும் பிணைமுறிகள் காலாவதியாகும்போது புதிதாக பிணைமுறி வெளியிடுவது மத்திய வங்கியில் இடம்பெறும் வழமையான செயற்பாடாகும். அதற்கு அப்பால் புதிதாக வேறு எங்கிருந்தும் கடன் பெறவில்லை.
திறைசேரியும் இதுதொடர்பில் விளக்கமளித்திருந்தது. பிணைமுறிகளுக்கான காலம் முடிவுறும்போது புதிய பிணைமுறி பத்திரங்கள் வெளியிடப்படும். இது ஒரு வட்டச் செயற்பாட்டை போன்று எதிர்காலத்திலும் இடம்பெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |