காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு

Sri Lanka Eastern Province Education
By Rakshana MA Oct 23, 2024 05:38 AM GMT
Rakshana MA

Rakshana MA

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வேலைத்திட்டமான மாணவத் தூதுவர் மாநாடு காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு நேற்று (22) காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

கம்மன்பிலவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை: விஜித ஹேரத்

கம்மன்பிலவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை: விஜித ஹேரத்

ஒருங்கிணைப்பு

மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் யூ. எல். அசாருதீன் மற்றும் காரைதீவு பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜீ. ரேவதி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றுள்ளது.

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு | Student Ambassador Conference At Karativu

மேலும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவஞானம் ஜெகராஜன் கலந்து கொண்டுள்ளார்.

மாணவ தூதுவர்கள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 4 கல்வி வலயங்களை சேர்ந்த மாணவத் தூதுவர்களாக பதிவு செய்த மாணவர்களும், அவர்களது ஆசிரியர்களும் அண்ணளவாக 100 பேர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு | Student Ambassador Conference At Karativu

அத்தோடு இந்நிகழ்விற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் வலயக் கல்வி, முறைசாரா கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்து தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வின் வளவாளர்களாகவும், ஒருங்கிணைப்பாளர்களாகவும் அம்பாறை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் அம்பாறை, சம்மாந்துறை, நிந்தவூர் செயலக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு | Student Ambassador Conference At Karativu 

அரிசியின் கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

அரிசியின் கட்டுப்பாட்டு விலை குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை

தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW