மாவடிப்பள்ளியில் பாய்ந்தோடும் வெள்ளம் : தீவிரமாக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்கள்
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளநிலைமையுடன், வெள்ள நீரை கட்டுப்படுத்த அணைக்கட்டுகளை திறந்தமையாலும் ஏற்பட்ட அசாதாரண நிலைமையினால் காரைதீவு(Karaitivu) பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிப்பு செய்வதற்காகவும், வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் காரைதீவு பிரதேச செயலாளர், பொறியியலாளர் ஜி.அருணனின் வழிகாட்டுதல் மற்றும் பணிப்புரைக்கு அமைய அனர்த்த முகாமைத்துவ குழு ஒன்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் செயல்
மேலும், இந்த நடவடிக்கையை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ளதுடன், பொதுமக்கள் நலன் கருதி இவ்வாறான முன்னாயத்த செயற்பாடுகளும் பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த இரு மாதத்திற்கு முன் இதே பிரதேசத்தில் எட்டு பேர் வெள்ளத்தில் மூழ்கி இறந்த துயர சம்பவம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |