அம்பாறையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமைகள்
அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை - பாண்டிருப்பு பிரதேசத்தில் நேற்று(20) இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இதனை அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடையும் இருக்குமென கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கரையொதுங்கும் கடலுயிரினங்கள்
இது தொடர்பில் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கையில்,
ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில், குறித்த கடலாமைகள் இரண்டும் ஒலிவ் வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது. இதே போன்று கடந்த வாரமும் பெரிய நீலாவணை பகுதியிலும் பெரிய கடலாமையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது என கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மை காலங்களில் கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |