இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கி(CBSL) இன்றைய நாளுக்கான (20) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.81 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பணப்பெறுமதி
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 209.45 ரூபாவாகவும், கொள்வனவு விலை 200.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 311.37 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 298.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 368.48 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 354.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 188.86 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 179.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 221.96 ரூபாவாகவும் ஆகவும் ,கொள்வனவு பெறுமதி 212.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 1.94 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.86 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.
வங்கிகளில் டொலரின் பெறுமதி
இந்நிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், வங்கிகளில் இன்று(20) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி ரூ. 299.75 முதல் ரூ.300.25 இற்கும், கொள்முதல் பெறுமதி ரூ. 291.75 முதல் ரூ. 292.25 முறையே பதிவாகியுள்ளது.
NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் மாறாமல் ரூ. 292.75 மற்றும் விற்பனை விலை ரூ. 302.75 பதிவாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ.291.49 மற்றும் ரூ. 301.95.முறையே மாறாமல் இருப்பதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 290.43 முதல் ரூ. 290.94 வரையிலும் விற்பனை பெறுமதி ரூ. 300.25 முதல் ரூ. 300.50 என்றவாறாகக் காணப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |